Enable Javscript for better performance
மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு விஎச்பி கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு விஎச்பி கடிதம்

    By dn  |   Published on : 30th April 2014 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அவருக்குப்  பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அந்த அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் இக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

    "நரேந்திர மோடியை தற்கொலைப் படை மூலம் படுகொலை செய்ய பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. "பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டு வருவேன்' என நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்த பிறகு, அவருக்குப் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.  எனவே, நாட்டில் பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்க வேண்டும்' என்று அக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai