Enable Javscript for better performance
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இயலாமையின் வெளிப்பாடு- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அக்கட்சியின் இயலாமையை வெளிப்படுத்துகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா எம்.பி. தெரிவித்தார்.

    இது குறித்து தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வழக்கம்போல ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சியின் சாதனைகள்தான் என்ன?  நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் காங்கிரஸ் அரசு தோல்வியைத்தான் கண்டுள்ளது. தேர்தலைக் கருத்தில் கொண்டே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற பொய்யான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் வேலையில்லாத இளைஞர் பட்டாளம் பெருமளவு அதிகரித்து வருகிறது.

    வறுமையை ஒழித்து வருவதாக காங்கிரஸ் கட்சி கூறுவதில் உண்மையில்லை. விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது.

    பணவீக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. ஏழை - பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஊழல் தவிர்க்க முடியாதது என்ற பாணியில் பிரதமரின் பேச்சு அமைந்துள்ளது.

    தேர்தல் அறிக்கையில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்துக்கு 15 அம்சத் திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது. சாதனைகள் புரிந்ததாகவும், மேலும் சாதனைகளைப் புரிய ஆதரவு தருமாறும் தேர்தல் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

    இது காங்கிரஸின் இயலாமையை மேலும் அம்பலப்படுத்துகிறது என்றார் டி.ராஜா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai