Enable Javscript for better performance
கொள்ளைக் கும்பல்கள் மோதல்: ஒருவர் கொலை; ஒருவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    இரு கொள்ளைக் கும்பலினரிடையே நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார்.

    கிரேட்டர் நொய்டா, டான்கெüர் பகுதியில் நிகழ்ந்த இச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது: நவடா பகுதியில் வசித்து வருபவர்கள் அனில் சிங், அஜாப் சிங். இதில் அனில் சிங் மீது பல்வேறு கொள்ளை, பணப் பறிப்பு வழக்குகள் உள்ளன. இவர் டான்கெüர் பகுதியில் இயங்கி வரும் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்.

    மற்றொரு கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் பர்மிந்ததர், சதீஷ், ராகுல், ஷோபித், கபில், சந்திப்.

    இந்த இரு கும்பலினருக்கும் இடையே டான்கெüர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது. மோதலின்போது 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் அனில் சிங், அஜாப் சிங் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அனில் சிங் இறந்தார். அஜாப் சிங்கின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai