Enable Javscript for better performance
தில்லியில் நைஜீரிய இளைஞர் கொலை: சக நாட்டவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் பிறந்தநாள் விருந்தில் ஏற்பட்ட தகராறில் சக நாட்டவரால் நைஜீரிய இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து போலீஸார் கூறியது: ஒஷிஃபோ (34), கெல்வின் (32), ஹென்றி ஆகிய மூவரும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள். நண்பர்களான இவர்கள் தெற்கு தில்லி, நெப் சராய் பகுதியில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த பிறந்தநாள் விருந்தில் பங்கேற்றனர். வேறு சிலரும் அதில் பங்கேற்றனர். அப்போது மது அருந்தினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாய்த் தகராறில் ஒஷிஃபோ, கெல்வின் ஆகிய இருவரையும் ஹென்றி கத்தியால் குத்தினார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.மற்ற அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பினர். காயமடைந்த இருவரையும் போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒஷிஃபோ ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கெல்வின் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஹென்றி கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai