Enable Javscript for better performance
தெஹ்சீன் அக்தரை போலீஸ் காவலில் விசாரிக்க தில்லி  நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தெஹ்சீன் அக்தரை போலீஸ் காவலில் விசாரிக்க தில்லி  நீதிமன்றம் உத்தரவு

    Published on : 27th March 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்க கமாண்டர் தெஹ்சீன் அக்தரை ஏப்ரல் 2-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

    இந்திய-நேபாள எல்லையில் தெஹ்சீன் அக்தரை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது செய்ததாக தில்லி போலீஸார் கூறினர். இதையடுத்து, கார் மூலம் டார்ஜிலிங் கொண்டு வரப்பட்ட அவர் அங்கிருந்து புதன்கிழமை காலை தில்லிக்கு தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அவரை தில்லி தனிப் பிரிவு போலீஸார் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, "முக்கிய வழக்குகளில் தெஹ்சீன் அக்தருக்குத் தொடர்பு உள்ளதால் அவரை 14 நாள்கள் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, தில்லி லோதி காலனியில் உள்ள தனிப் பிரிவு அலுவலகத்துக்கு தெஹ்சீன் அக்தரை போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு வரும் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் ஜியா உர் ரஹ்மான் என்கிற வகாஸýடன் வைத்து போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

    இதையடுத்து, புதன்கிழமை மாலையில் தெஹ்சீன் அக்தரை தனிப் பிரிவு அலுவலகத்துக்கு வெளியே அழைத்து வந்த போலீஸார், அவரை ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று விசாரித்து வருவதாகத் தெரிகிறது.

    பயங்கரவாத வழக்குகள் தொடர்பாக அவரை ஹைதராபாத், ஜெய்ப்பூர், புத்த கயை ஆகிய நகரங்களுக்குக் கொண்டு சென்று விசாரிக்க தனிப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

    மூணாறில் விசாரணை: இதற்கிடையே, தலைமறைவாக வசித்த காலத்தில் கேரளத்தின் மூணாறு சுற்றுலாப் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தெஹ்சீன் அக்தர் சில நாள்கள் தங்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு உதவியவர்கள் தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள மாநில மத்திய உளவுப் பிரிவு (இண்டலிஜென்ஸ் பியூரோ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் விசாரணையை ஒருங்கிணைக்க தில்லி போலிஸின் தனிப்படை ஒன்றும் திருவனந்தபுரத்துக்கு புதன்கிழமை சென்றுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai