Enable Javscript for better performance
பணப் பிரச்னையில் தாக்குதல்: பி.டெக். மாணவர் படுகொலை- Dinamani

சுடச்சுட

    

    பணப் பிரச்னை தொடர்பாக நடைபெற்ற தாக்குதலில் பி.டெக் மாணவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

    இது குறித்து போலீஸார் கூறியதாவது: தெற்கு தில்லி, சஹீன் பாக் பகுதியில் வசித்தவர் ரெஹான் (20). பி.டெக். மாணவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த டேனிஷ் என்பவரிடம் ரூ. 4,000 கடன் பெற்றிருந்தாராம். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.

    இந் நிலையில், பண பிரச்னை குறித்து பேச வரும்படி திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்த ரெஹானை டேனிஷ் அழைத்துள்ளார். இதன்படி அங்கு சென்ற ரெஹானுடன் டேனிஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது டேனிஷின் நண்பர்கள் மூவர் அங்கு வந்தனர்.

    அவர்கள் நால்வரும் சேர்ந்து ரெஹானை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர், அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பினர்.

    தகவல் அறிந்து அங்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, டேனிஷ் கைது செய்யப்பட்டார். மற்ற மூவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai