Enable Javscript for better performance
மணிப்பூர் தம்பதி மீது தாக்குதல்: போலீஸில் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லியில் மணிப்பூர் தம்பதி மீது வீட்டு உரிமையாளர் தாக்கியதாகப் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தில்லி போலீஸார் கூறியது:மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் தெற்கு தில்லி, முனிர்கா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வெளியில் சென்றிருந்த அவர்கள், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் பிரதான நுழைவுவாயில் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, கதவைத் திறப்பதற்காக பிரதான நுழைவுவாயில் கதவின் சாவியை வீட்டு உரிமையாளரிடம் கேட்டனர்.

    அதைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளருக்கும், அத் தம்பதியினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளரும், அவரது உறவினர்களும் சேர்ந்து மணிப்பூர் தம்பதியை சரமாரியாகத் தாக்கினர்.

    இதில் காயமடைந்த அத் தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அண்மையில், தெற்கு தில்லி, முனிர்கா பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த 14 வயது இளம் பெண்ணை, அவ் வீட்டின் உரிமையாளரின் மகன் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது.

    இச் சம்பவத்தைக் கண்டித்து, தில்லியில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந் நிலையில், வடகிழக்கு மாநிலத் தம்பதி மீது தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai