Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளி வாகனங்களுக்குத் தனி இடம்: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி வாகனங்களுக்குத் தனி இடம்: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Published on : 27th March 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள வாகன நிறுத்த மையங்களில் மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களை நிறுத்துவதற்குத் தனியாக இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரும் மனுவுக்கு தில்லி அரசு, மூன்று மாநகராட்சிகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர் வினோத் குமார் பன்சல், உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

    மனுவில், "தில்லி மாஸ்டர் பிளான் 2021' திட்டத்தில், வாகன நிறுத்துமிடங்களில் மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் மாற்றுத் திறனாளிகள் சாலையைக் கடக்க வசதியாக "அறிவிப்பு ஒலி' ஏற்பாடு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளுக்கு (வீல் சேர்) பிரத்யேக பாதை அமைக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் பி.டி. அகமது, சித்தார்த் மிருதுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தில்லி அரசு, மாநகராட்சிகள், போக்குவரத்து காவல் துறை, காவல் துறை ஆணையர் மற்றும் தில்லி மேம்பாட்டு ஆணையம் வரும் மே 26-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai