Enable Javscript for better performance
ஆம் ஆத்மியினர் 4 பேருக்கு ரூ.10,000 அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி கட்சி முன்னாள் உறுப்பினரான வினோத் குமார் பின்னி தொடர்ந்த அவதூறு வழக்கில் தாமதமாக பதிலளித்ததாகக் கூறி அக்கட்சிக்கும், அக்கட்சியின் உறுப்பினர்கள் 4 பேருக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னதாக, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்ததாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சி, அதன் உறுப்பினர்கள் அல்கா லம்பா, மனோஜ் குமார், ராஜு திங்கன், பந்தனா குமாரி ஆகியோருக்கு எதிராக வினோத் குமார் பின்னி கடந்த ஆண்டு அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.

    அந்த வழக்கை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இணை பதிவாளர் விசாரணைக்கு மாற்றி நீதிபதி மன்மோகன் சிங் உத்தரவிட்டார். அத்துடன், அந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு எதிர்தரப்பினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், அடுத்தகட்ட விசாரணை கடந்த ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    அன்றைய தினம் தங்கள் தரப்பு பதிலை அளிக்காத ஆம் ஆத்மி கட்சியினர், கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது பதிலை சமர்ப்பித்தனர். தங்கள் தரப்பு பதிலை தாமதமாக அளித்த காரணத்தால், ஆம் ஆத்மி கட்சிக்கும், ஆல்கா லம்பா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து இணை பதிவாளர் நீரா பரிஹோக் உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai