Enable Javscript for better performance
ஆம் ஆத்மி, கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு:மீண்டும் விசாரிக்க செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி, கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு:மீண்டும் விசாரிக்க செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

    By புது தில்லி,  |   Published on : 17th April 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம் ஆத்மி கட்சிக்கும், அதன் தலைவர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் எதிராக தொடுக்கப்பட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கு குறித்த விவரம் வருமாறு:

    தனி நபர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவும், சர்ச்சைக்குரிய நிலத்தை மீட்கவும் உதவி வேண்டி சிலர் ஆம் ஆத்மி தலைவர்களிடம் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும், அதற்கு பரதிபலனாக கட்சிக்கு நன்கொடை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்ட விடியோ ஒன்று வெளியானதாக கூறப்படுகிறது.

    அந்த விடியோ அடிப்படையற்றது என்று மறுத்த ஆம் ஆத்மி கட்சி, அதுதொடர்பாக, "மீடியா சர்க்கார்' என்ற செய்தி ஊடகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் அனுரஞ்ஜன் ஜா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது.

    இதனால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, ஆம் ஆத்மி, அதன் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, குமார் விஷ்வாஸ், யோகேந்திர யாதவ், ஷாஜியா இல்மி ஆகியோருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனுரஞ்ஜன் ஜா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை மேற்கொண்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம், புகார்தாரரான அனுரஞ்ஜன் ஜா, போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி 2014ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கேஜரிவால் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செஷன்ஸ் நீதிமன்றத்தில் அனுரஞ்ஜன் ஜா மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தினேஷ் குமார் சர்மா, "தள்ளுபடி செய்த வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும். புகார்தாரர் (அனுரஞ்ஜன் ஜா) வரும் 20ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai