Enable Javscript for better performance
குடல் புழு நீக்கம் மாத்திரை சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி- Dinamani

சுடச்சுட

    

    குடல் புழு நீக்கம் மாத்திரை சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி

    By புது தில்லி  |   Published on : 17th April 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடல் புழு நீக்கம் செய்யும் மாத்திரைகளை வியாழக்கிழமை சாப்பிட்ட தில்லி அரசு பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

    இதுகுறித்து ஹிந்து ராவ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கூறுகையில், "குடல் புழு நீக்கம் மாத்திரை சாப்பிட்டதால் வயிற்று வலி, வாந்தியால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை சிகிச்சைக்காக வந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாலையில் அனுப்பி வைக்கப்பட்டனர்' என்றார்.

    இந்தச் சம்பவம் குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், "வயிற்றில் அதிகமாக பூழுக்கள் இருக்கும் மாணவர்கள், இந்த வகையான மாத்திரை சாப்பிடும் போது இதுபோன்ற அசோகரியம் ஏற்படுவது இயல்பானது என்று அவர் தெரிவித்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai