Enable Javscript for better performance
தலைநகரில் இ-ரிக்ஷா பதிவு தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் இ-ரிக்ஷாக்களை பதிவு செய்து, அவற்றுக்கு உரிமம் வழங்கும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் இ-ரிக்ஷா உரிமையாளர்களும், அதை பயன்படுத்தும் பொது மக்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

    தலைநகரின் 13 பிராந்திய போக்குவரத்து அதிகாரிகளின் கீழ், இ-ரிக்ஷாவை பதிவு செய்யும் நடவடிக்கையை தில்லி அரசு தொடங்கியுள்ளது. போக்குவரத்துத் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ள 7 வகையான புதிய இ-ரிக்ஷாக்களை பதிவு செய்வதற்கான எளிய நடைமுறை வகுக்கப்பட்டுள்ளதாக அத்துறை சார் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, இ-ரிக்ஷாக்களை இயக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு மக்களவை, மாநிலங்களவையில் கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai