Enable Javscript for better performance
தில்லி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நலக் குழுக்கள்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நலக் குழுக்கள்

    By புது தில்லி,  |   Published on : 17th April 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார நல வசதிகளை மேம்படுத்தும் வகையில் நோயாளிகள் நலக் குழுக்கள் அமைக்க தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து தில்லி அரசின் உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:

    தேசியத் தலைநகரில் உள்ள சுகாதார நல வசதிகளை மேம்படுத்த மாவட்ட பொறுப்பாளர்களாக 10 எம்எல்ஏக்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதர 28 எம்எல்ஏக்கள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நல குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள். தில்லியின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கவனிப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இதற்கான முடிவு சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நோயாளிகள் நலக் குழுக்கள் நல்லமுறையில் செயல்படவும், தங்களது செயல்பாடுகள் குறித்த மாவட்ட பொறுப்பாளர்களுக்கான தெளிவான வழிகாட்டுதல்களுக்காவும் நிலையானசெயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) சுகாதார துறை தயாரிக்கும். நோயாளிகள் நலக் குழுக்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் செயல்பாட்டுக்கான புதிதாக சட்டவிதிகளை உருவாக்க அமைச்சரவையின் அனுமதியைக் கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த இரு அமைப்புகளும் அடிப்படை சுகாதாரம், மருத்துவமனைகளின் வார்டுகள் நிலைமை, அறுவைச் சிகிச்சை அரங்குகளின் நிலைமை, புறநோயாளிகளின் சூழல், உள்நோயாளிகளுக்கான வசதிகள் ஆகியவை தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தும் என்றார் அந்த அதிகாரி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai