Enable Javscript for better performance
\\\"நொய்டாவில் நிலத்தடி நீர் அளவு அபாய கட்டத்தில் உள்ளது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "நொய்டாவில் நிலத்தடி நீர் அளவு அபாய கட்டத்தில் உள்ளது'

    By புது தில்லி,  |   Published on : 17th April 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நொய்டாவில் நிலத்தடி நீர் அளவு ஆபாய கட்டத்தில் உள்ளது என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    நொய்டாவைச் சேர்ந்த விக்ரந்த குமார் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், "நொய்டாவில் கட்டுமான பணிகளுக்காக நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனால் நிலத்தடி நீர் அளவு வேகமாக குறைந்து வருகிறது. மேலும் அங்கு நீர் மாசு ஏற்பட்டு வருகிறது' என்று தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவை கடந்த 2013ஆம் ஆண்டு விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அப்பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக நிலத்தடி நீரை பயன்படுத்த தடை விதித்தது.

    மேலும், நொய்டா பகுதியின் நிலத்தடி நீர் அளவு குறித்த ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

    இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் முன்பு வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், "கிரேட்டர் நொய்டாவை விட நொய்டாவில் நிலத்தடி நீர் அளவு அபாயகரமான கட்டத்தில் உள்ளது.

    கிரேட்டர் நொய்டாவில் தொழிற்சாலை வளர்ச்சி பெற்ற பிறகு அங்கேயும் நிலத்தடி நீர் அளவு குறைய வாய்ப்புள்ளது.

    நொய்டாவில் ஒரு குடும்பம் ஒரு வீட்டை மட்டும் வாங்க வேண்டும் என்று விதிமுறை கட்டாயமாக்க வேண்டும். முதலீடு செய்வதற்காக நொய்டாவில் வீடுகளை வாங்கக் கூடாது.

    இதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai