Enable Javscript for better performance
பெண் பயணியிடம் தகாத கேள்விகள்:தில்லி விமான நிலைய அதிகாரி கைது- Dinamani

சுடச்சுட

    

    பெண் பயணியிடம் தகாத கேள்விகள்:தில்லி விமான நிலைய அதிகாரி கைது

    By புது தில்லி  |   Published on : 17th April 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் இருந்து வெளிநாடு சென்ற பெண் பயணியிடம் தகாத கேள்விகள் கேட்டதாக விமான நிலைய குடியேற்ற அதிகாரி வினோத் குமார் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து தில்லி போலீஸார் கூறியதாவது:

    பெங்களூரில் இருந்து தில்லி வழியாக கடந்த மாதம் ஹாங்காங்கிற்கு சென்ற பெண் பயணியிடம் விமான நிலைய அதிகாரி தகாத கேள்விகள் கேட்டதாக பாதிக்கப்பட்ட பெண் பின்னர் நாடு திரும்பியதும் தனது தந்தையிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து, அவரது தந்தை இ-மெயில் மூலம் குடியேற்ற ஆணையருக்கு புகார் அளித்துள்ளார்.

    இதன் அடிப்படையில் தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெங்களூரு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து, மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

    அதில், குடியேற்ற அதிகாரி தன்னிடம் பாலியல் ரீதியில் தகாத கேள்விகள் கேட்டது மட்டுமில்லாமல், உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான நிலையம் செல்லும் வரையில் தன்னை பின் தொடர்ந்தார் என்று புகார் தெரிவித்தார்.

    பின்னர் தில்லி திரும்பிய தில்லி போலீஸார், அதிகாரி வினோத் குமாரை புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

    பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்' என்று போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai