Enable Javscript for better performance
பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு 4 இருக்கைகள்: தில்லி அரசு முடிவு- Dinamani

சுடச்சுட

    

    பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு 4 இருக்கைகள்: தில்லி அரசு முடிவு

    By புது தில்லி,  |   Published on : 17th April 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு 4 இருக்கைகளை ஒதுக்கீடு செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தில்லியில் ஓடும் டிடிசி, மெட்ரோ ஃபீடர், கிளஸ்டர், சிற்றுந்து என அனைத்துப் பேருந்துகளுக்கும் அரசின் இந்த உத்தரவு பொருந்தும். நடத்துனர் பகுதியில், முன் வாசலை நோக்கியுள்ள 4 இருக்கைகளை மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த உத்தரவை தவறாமல் பின்பற்றுமாறு ஓட்டுநர், நடத்துனர், இதர பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.

    பேருந்துகளில், ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறமுள்ள ஒரு இருக்கையை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து ஆம் ஆத்மி அரசு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai