Enable Javscript for better performance
\\\"பொது நிகழ்ச்சி: தூய்மை பணிக்கு அமைப்பாளர்களே பொறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    "பொது நிகழ்ச்சி: தூய்மை பணிக்கு அமைப்பாளர்களே பொறுப்பு

    By 'புது தில்லி,  |   Published on : 17th April 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் பொது இடங்களின்

    தூய்மை பணிக்கு அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்களே பொறுப்பேற்கச் செய்யும் வகையில், நிலையான விதிமுறைகளை ஏற்படுத்த நகர்ப்புற வளர்ச்சித் துறை திட்டமிட்டு வருகிறது.

    முன்னதாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது இடங்களை சுத்தமாக வைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலர் மதுசுதன் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், தில்லி மாநகராட்சி பிரதிநிதிகள், தில்லி போலீஸார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து, நகர்ப்புற வளர்ச்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்தும் அமைப்பாளர்களே, நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த இடத்தை சுத்தமாக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

    இதன்படி, மாநகராட்சி, தில்லி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றில் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறதோ, அந்த நிர்வாகத்திடம் ஒரு குறிப்பிட்ட தொகையை பிணையத் தொகையாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அளிக்க வேண்டும்.

    ஒருவேளை, நிகழ்ச்சி முடிந்த பிறகு அதன் ஒருங்கிணைப்பாளர் தூய்மைப் பணியை மேற்கொள்ளவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிர்வாகம் அந்த பிணையத் தொகையைக் கொண்டு நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும்.

    எனினும், நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே இந்தத் திட்டம், அதற்கான பிணைத் தொகை ஆகியவை குறித்து அறிவிக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai