Enable Javscript for better performance
முக்கியப் பதவிகளுக்கு அதிகாரிகளின்றி செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையம்- Dinamani

சுடச்சுட

    

    முக்கியப் பதவிகளுக்கு அதிகாரிகளின்றி செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையம்

    By புது தில்லி,  |   Published on : 17th April 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் ஆணையர், துணைத் தேர்தல் ஆணையர் உள்பட சில முக்கியப் பதவிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படாமல் தலைமைத் தேர்தல் ஆணையம் இயங்கி வருகிறது.

    நாடாளுமன்றம், சட்டப்பேரவை உள்ளிட்டவற்றுக்குத் தேர்தல் நடத்தும் முக்கியப் பொறுப்பு மிக்க தேர்தல் ஆணையத்துக்கு தன்னிச்சையான அதிகாரத்தை அரசியலமைப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், அதிலும் சில உயரதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலை தொடருகிறது.

    இந்த ஆணையத்தில் தற்போது ஓர் ஆணையர் பதவி கடந்த ஜனவரி மாதம் முதல் காலியாகவுள்ளது. இதேபோல, நான்கு இடங்கள் கொண்ட தலைமை இயக்குநர் பதவிகளில் இரண்டு இடங்கள் காலியாகவுள்ளன.

    இதில் ஒரு பதவி கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நிரப்பப்படவில்லை. நான்கு இடங்கள் கொண்ட துணைத் தேர்தல் ஆணையர் பதவியில் ஓர் இடம் காலியாகவுள்ளது.

    மேற்கண்ட உயரதிகாரிகள் கட்டமைப்புதான் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முக்கிய முடிவுகளையும், கொள்கை முடிவுகளையும் எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

    இந்நிலையில், மத்திய அரசுப் பணியில் இருக்கும் தகுதி வாய்ந்த அதிகாரிகளைத் தேர்தல் ஆணையப் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டியது மத்தியப் பணியாளர் நலத் துறையின் பொறுப்பாகும்.

    இந்நிலையில், மத்திய அரசுப் பணியில் பிற துறைகளில் சேர ஆர்வம் காட்டும் அதிகாரிகள் தேர்தல் ஆணையப் பணியில் சேர போதிய ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

    இதன் விளைவாகவே சில மாதங்களாக ஆணையத்தின் முக்கியப் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai