Enable Javscript for better performance
வாஷிங்டனில் தருண் விஜய்க்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய்க்கு வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தினர் பாராட்டு நிகழ்ச்சியை நடத்தி கௌரவித்தனர்.

    உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரும், மாநிலங்களவை பாஜக உறுப்பினருமான தருண் விஜய், தமிழுக்காக நாடாளுமன்றத்திலும், வட இந்தியாவிலும் குரல் கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கப்பதற்காக அவர் சென்றிருந்தார். அவரது வருகை குறித்து தகவலறிந்த வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் பாபு குப்புசாமி, வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பீட்டர் முத்துசாமி ஆகியோர் தருண் விஜய்க்கு பாராட்டு நிகழ்ச்சியை நடத்தினர்.

    மேரிலாண்ட் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் தமிழர்கள் பலர் தமிழ்ப் பணி ஆற்றிவரும் தருண் விஜய்க்குப் பாராட்டுத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பாபிலு விநாயகம், மகளிர் பிரிவு பொறுப்பாளர் உஷா வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தருண் விஜய், "தமிழன்னையின் புகழ் பரப்பும் எனது பணியைத் தொடர்ந்து மேற்கொள்வேன். அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் திருவள்ளுவர் ஆய்வு பிரிவு அமைக்க முயற்சி செய்வேன்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai