Enable Javscript for better performance
அரசியல் கட்சி அலுவலகங்களில் குடியரசு தினக் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரசியல் கட்சி அலுவலகங்களில் குடியரசு தினக் கொண்டாட்டம்

    By புது தில்லி,  |   Published on : 27th January 2015 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டின் 66-ஆவது குடியரசு தின விழாவையொட்டி தில்லியில் உள்ள முக்கிய அரசு அலுவலங்கள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் மூவர்ண தேசிய கொடி திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

    இதையொட்டி, தில்லி அசோக சாலையில் அமைந்துள்ள பாஜக தேசிய அலுலகத்தில் அக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய செயலாளர்கள் எச். ராஜா, ராம் லால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    இதேபோல, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தமது பிருத்திவிராஜ் சாலை இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அத்வானிக்கு பாதுகாப்பு அளித்து வரும் தேசிய பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையின் வீரர்கள், பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மோதி லால் நேரு மார்கில் அமைந்துள்ள தமது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    காங்கிரஸ் வாழ்த்து: குடியரசு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விடுத்திருந்த வாழ்த்து செய்தியில், "அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மாண்புகளைக் கடைப்பிடிக்கவும், தேச ஒற்றுமைக்காக பாடுபடவும் உறுதியேற்போம்' என குறிப்பிட்டிருந்தனர்.

    குடியரசு தினத்தையொட்டி வடக்கு தில்லி, தெற்கு தில்லி, கிழக்கு தில்லி ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள், மாநகராட்சி அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றினர். இதில் ஏராளமான மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தில்லி காவல்துறை: தில்லி காவல்துறை தலைமை அலுலகத்தில் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தில்லி காவலர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

    இதேபோல, தில்லி மேம்பாட்டு ஆணையம், தில்லி ஜல் போர்டு, தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் உள்பட மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai