Enable Javscript for better performance
ஒபாமா, மோடியின் வானொலி உரை இன்று ஒலிபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒபாமா, மோடியின் வானொலி உரை இன்று ஒலிபரப்பு

    By புது தில்லி,  |   Published on : 27th January 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து வானொலியில் ஆற்றிய உரை, செவ்வாய்க்கிழமை (ஜன.27) இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

    "மன் கீ பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக கடந்த அக்டோபர் முதல் மாதந்தோறும் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த மாத வானொலி நிகழ்ச்சியில் ஒபாமாவும் இணைந்து உரையாற்றியுள்ளார்.

    இந்திய மக்களுக்காக, இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஆற்றிய உரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வானொலி நிகழ்ச்சியில் ஒபாமா பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவு செய்துள்ள மோடி, இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:

    "மன் கீ பாத்' நிகழ்ச்சியில் நானும், ஒபாமாவும் எங்களது கருத்துகளை வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்துள்ளோம். இந்த சிறப்பு நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு அகில இந்திய வானொலியில் கேட்கலாம் என்று மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற மோடி, அங்குள்ள பிரபல பத்திரிகையில் ஒபாமாவுடன் இணைந்து கட்டுரை எழுதியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai