Enable Javscript for better performance
தேசியக் கொடிக்கு அன்சாரி வணக்கம் செலுத்தாததால் சர்ச்சை- Dinamani

சுடச்சுட

    

    தேசியக் கொடிக்கு அன்சாரி வணக்கம் செலுத்தாததால் சர்ச்சை

    By புது தில்லி,  |   Published on : 27th January 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் நடைபெற்ற 66ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சியின்போது, தேசியக் கீதம் இசைக்கப்பட்டபோது, தேசியக் கொடிக்கு குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வணக்கம் செலுத்தாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தில்லி குடியரசு தின நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியான புகைப்படங்களில், தேசியக் கொடிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் வணக்கம் செலுத்தினர். ஆனால், ஹமீது அன்சாரி வணக்கம் செலுத்தவில்லை.

    சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளப்பக்கத்தில், இந்த புகைப்படங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட கருத்துகளில், அன்சாரியை கடுமையாக பலர் விமர்சித்திருந்தனர். சிலர் இந்த விவகாரத்தை தேவையில்லாதது என்று குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி சார்பாக அவரது அலுவலகம் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    விதிமுறைகள்படி, தேசிய கீதம் இசைக்கப்படும்போது, நிகழ்ச்சியின் முதன்மை பிரமுகரும், ராணுவ உடைகளில் இருப்பவர்களும்தான் வணக்கம் செலுத்த வேண்டும். சாதாரண உடையில் இருப்பவர்கள், கால்களை ஒன்று சேர்த்து நின்றால் போதுமானதாகும். அதன்படி, குடியரசு தின நிகழ்ச்சியில், முப்படைகளின் தலைமை தளபதியான குடியரசுத் தலைவர் வணக்கம் செலுத்தினார். விதிகள்படி, குடியரசு துணைத் தலைவர் கால்களை சேர்த்து மட்டும் நின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai