Enable Javscript for better performance
தொப்பி, துண்டுகள் அணிய பார்வையாளர்களுக்கு தடை- Dinamani

சுடச்சுட

    

    தொப்பி, துண்டுகள் அணிய பார்வையாளர்களுக்கு தடை

    By புது தில்லி,  |   Published on : 27th January 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில், குடியரசு தின விழா நிகழ்ச்சியின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக, ராஜபாதைப் பகுதியில் தொப்பி மற்றும் துண்டுகள் கொண்டு செல்ல பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இதன் காரணமாக, மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே அணிவகுப்புகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

    நிகழ்ச்சியின்போது மாவோயிஸ்டுகளால் இடையூறு ஏற்படக்கூடும் அச்சுறுத்தல் இருந்ததால், ராஜபாதைக்கு வந்த பார்வையாளர்கள் தங்களின் தொப்பிகள் மற்றும் துண்டுகளை நுழைவு வாயிலில் விட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

    ஒபாமா பங்கு பெறும் இந்த நிகழ்ச்சியில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பயன்பட்டு விடக் கூடாது என்பதற்காக கருப்பு நிற தலைப்பாகைகளையும் அதிகாரிகள் தடை செய்திருந்தனர். கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, நிகழ்ச்சி தொடங்கிய 10 மணிக்குப் பிறகு எவரும் நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai