Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு அத்வானி என்னிடம் கேட்டுக்கொண்டார்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு அத்வானி என்னிடம் கேட்டுக்கொண்டார்

    By புது தில்லி  |   Published on : 27th January 2015 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுமாறு அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தன்னை கேட்டுக்கொண்டதாக, அக்கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

    தில்லி ஆதர்ஷ் நகர் தொகுதியில் திங்கள்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது அவர் இதுபற்றி மேலும் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுமாறு அக்கட்சி என்னிடம் கேட்டுக்கொண்டது. கட்சியின் மூத்த தலைவர் அத்வானியும், தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

    நான் தில்லி காவல்துறையில் இருந்தபோது, அமிருதசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்ற முறையில் அந்தத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் எனக்கு வாய்ப்பளிப்பதாகக் கூறியது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சியில் உயரிய பதவிக்கான வேட்பாளராக போட்டியிடுமாறு அக்கட்சி என்னை கேட்டுக்கொண்டபோது அதற்கு பதில்கூட நான் அளிக்கவில்லை.

    தலைநகரில் எந்த வகையிலான ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி வழங்கியது? ஜந்தர் மந்தரில் அமர்ந்து போராடியதுதான் அவர்கள் நடத்திய ஆட்சியாக இருந்தது. தற்போது குடியரசு தின விழாவுக்கு அழைப்பு இல்லை என்று கூறியுள்ள கேஜரிவால், "குடியரசு தின கொண்டாட்டங்கள் தேவையற்றது, அதற்காக பணத்தை விரயமாக்கக்கூடாது' என்று கூறியவர்தான் என்றார் கிரண் பேடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai