Enable Javscript for better performance
அரசியலில் கேஜரிவால் முதிர்ச்சி பெற வேண்டும்: கிரண் பேடி- Dinamani

சுடச்சுட

    

    அரசியலில் கேஜரிவால் முதிர்ச்சி பெற வேண்டும்: கிரண் பேடி

    By புது தில்லி  |   Published on : 28th January 2015 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி, ஜன. 27: குடியரசு தின விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாததாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறியிருந்ததை அடுத்து, "அரசியலில் அவர் முதிர்ச்சி பெற வேண்டும்' என்று பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி கூறியுள்ளார்.

    இதுகுறித்து, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்க்காணலில் அவர் கூறியதாவது:

    குடியரசு தின விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படாத விவகாரம் தொடர்பாக அரவிந்த் கேஜரிவால் எதையேனும் கூறிக் கொண்டேயிருக்கிறார். அவர் அரசியலில் முதிர்ச்சி பெற வேண்டும். ஆழைப்புகளை கேட்டுப் பெறக் கூடாது. விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்றவாறு அது தானாக கிடைக்க வேண்டும் என்று கிரண் பேடி கூறினார். முன்னதாக, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கிரண் பேடிக்கு விவிஐபி இருக்கை ஒதுக்கப்பட்டதற்கு, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

    காங்கிரஸ் சாடல்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், "அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதென்பது ஒவ்வொரு குடிமக்களுக்கான உரிமை. ஆனால், கிரண் பேடிக்கு விவிஐபி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதே தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர்களுக்கான அந்த வரிசையில் அமர்வதற்கு அவருக்கு எந்தத் தகுதி உள்ளது?' என்றார்.

    ஆம் ஆத்மி: இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி மர்லேனா கூறுகையில், "இது தேசத்தின் குடியரசு தினம். ஒரு கட்சியின் குடியரசு தினம் அல்ல. கிரண் பேடிக்கு அழைப்பு விடுத்து, அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்காததால் பாஜக என்ன சாதித்து விட்டது? இதன்மூலம் பாகுபாட்டுடன் குடியரசு தின நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்தியுள்ளனர்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai