Enable Javscript for better performance
கவச வாகனங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி: இரு மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை தாற்காலிக சேவை நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    கவச வாகனங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி: இரு மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை தாற்காலிக சேவை நிறுத்தம்

    By புது தில்லி  |   Published on : 28th January 2015 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி, ஜன. 27: தில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பாதுகாப்பு கவச வாகனங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி வரும் வியாழக்கிழமை (ஜனவரி 29) நடைபெற உள்ளது.

    இதையொட்டி, தில்லி சென்ட்ரல் செகரட்ரியேட், உத்யோக் பவன் ஆகிய மெட்ரோ நிலையங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, டிஎம்ஆர்சி நிர்வாக இயக்குநர் அனுஜ் தயாள் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    தில்லி குடியரசு தின அணிவகுப்பின்போது பங்கேற்ற பாதுகாப்பு கவச வாகனங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தில்லி போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில் அன்றைய தினம் சென்ட்ரல் செகரட்ரியேட், உத்யோக் பவன் ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் சேவை பிற்பகல் 2 முதல் மாலை 6.30 மணி வரை தாற்காலிகமாக நிறுத்தப்படும்.

     எனினும், ஹூடா சிட்டி சென்டர் - ஜஹாங்கீர்புரி, மண்டி ஹவுஸ் - பாதர்பூர் ஆகிய வழித்தடங்களில் செல்வோர், வேறு வழித்தடத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர். இதேபோல் மற்ற வழித்தடங்களில் எப்போதும் போல் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai