Enable Javscript for better performance
ஜன.31-இல் ஷாதராவில் பிரதமர் மோடி பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    புது தில்லி, ஜன. 27: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தில்லியில் உள்ள ஷாதராவில் ஜனவரி 31-இல் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

    அதேபோன்று, துவாரகா, ரோஹிணி, அம்பேத்கர் நகர் ஆகிய மூன்று இடங்களில் முறையே பிப்ரவரி 1, 3, 4 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள பிரசாரக் கூட்டங்கள் குறித்து தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

     பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள முதல் பொதுக்கூட்டம் ஜனவரி 31-இல் ஷாதராவில் உள்ள சிபிடி மைதானத்திலும், 2-ஆவது பொதுக்கூட்டம் பிப்ரவரி 1-இல் துவாரகாவிலும், 3-ஆவது பொதுக்கூட்டம் ரோஹிணியில் உள்ள ஜப்பானிய பூங்காவில் பிப்ரவரி 3-ஆம் தேதியும், இறுதி பொதுக்கூட்டம் அம்பேத்கர் நகரில் உள்ள விராட் சினிமா மைதானத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதியும் நடைபெற உள்ளன என்றார்.

    அங்கீகாரமற்ற காலனிவாசிகள் பெருமளவு வசித்து வருவதை கருத்தில் கொண்டு இறுதிப் பொதுக்கூட்டத்தை அம்பேத்கர் நகர் பகுதியில் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மேலும், 2013-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் நரேந்திர மோடி, அம்பேத்கர் நகரில் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், அத்தேர்தலில் பாஜகவின்

    குஷிராம் குனார் வேட்பாளர், ஆம் ஆத்மி கட்சியின் அசோக்குமார் செளகானிடம் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், அசோக்குமார் செளகான் இந்த முறை பாஜக சார்பில் இதே தொகுதியில் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai