Enable Javscript for better performance
ராஜபாதை அருகே கடைக்குள் இளைஞர் சடலம்- Dinamani

சுடச்சுட

    

    புது தில்லி, ஜன. 27: தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்ற ராஜபாதை அருகே உள்ள கடை ஒன்றில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி கூறியதாவது:

    குடியரசு அணிவகுப்பு நடைபெற்ற ராஜபாதை பகுதியில் ஏழு அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் ராஜபாதை அருகே உள்ள உத்யோக் பவன் பகுதியில் வெடிகுண்டு கண்டறியும் படைப் பிரிவு போலீஸார் கடைசி கட்ட சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள கடை ஒன்றில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். அவரது சடலம் அருகே கான்கிரீட் துண்டுப்பகுதி கிடந்தது. இதையடுத்து, அவரது சடலத்தை மீட்டு போலீஸார் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    உயிரிழந்த இளைஞரிடம் இருந்து செல்போன், சில ஆவணங்களை போலீஸார் மீட்டனர். அவர் அந்தக் கடையில் சில வாரங்களுக்கு முன்புதான் வேலைக்குச் சேர்ந்ததும் தெரியவந்தது. கான்கிரீட் துண்டுப்பகுதி தலையில் விழுந்ததால் அந்த இளைஞர் இறந்தாரா அல்லது ஏதும் சதித் திட்டம் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai