Enable Javscript for better performance
வாக்காளர்களுக்கு விரைவில் புகைப்பட வாக்குச் சீட்டுதேர்தல் ஆணையம் விநியோகிக்கிறது- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர்களுக்கு விரைவில் புகைப்பட வாக்குச் சீட்டுதேர்தல் ஆணையம் விநியோகிக்கிறது

    By புது தில்லி  |   Published on : 28th January 2015 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி, ஜன. 27: தில்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கான புகைப்படத்துடன்கூடிய வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் விரைவில் வழங்கவுள்ளது.

    இதுகுறித்து தில்லி தலைமைத் தேர்தல் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: உண்மையான வாக்காளர்களை உறுதிப்படுத்துவதற்காகவே இந்தப் புகைப்பட வாக்குச் சீட்டு வழங்கப்படவுள்ளது. இவை, தேர்தல் தேதிக்கு 5 அல்லது 6 நாள்கள் முன்பாக வாக்குச் சாவடி அதிகாரிகள் மூலம் வழங்கப்படும்.

    வாக்களிக்க வரும் வாக்காளர்கள் தங்களின் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துவரத் தவறும் பட்சத்தில், இந்தப் புகைப்பட வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

    தேர்தல் நாளின்போது வாக்குச் சாவடிக்கு வெளியே தேர்தல் அதிகாரி ஒருவர் வாக்காளர்களுக்கான புகைப்பட வாக்குச் சீட்டுகளுடன் முகாமிட்டிருப்பார். வாக்காளர்கள், அவரிடம் இருந்தும் தங்களுக்கான புகைப்பட வாக்குச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

    புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படம் பொருந்தாத பட்சத்தில், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், "பான்' அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாற்று ஆவணமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.

    கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தலைநகரில் உள்ள 70 தொகுதிகளில் மொத்தம் 1.30 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 72,60,633 பேர் ஆண்கள். 58,24,618 பேர் பெண்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai