Enable Javscript for better performance
விளம்பரத்தில் புகைப்படம் பயன்படுத்திய விவகாரம்: அரவிந்த் கேஜரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பினார் கிரண் பேடி- Dinamani

சுடச்சுட

    

    விளம்பரத்தில் புகைப்படம் பயன்படுத்திய விவகாரம்: அரவிந்த் கேஜரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பினார் கிரண் பேடி

    By DN  |   Published on : 28th January 2015 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் விளம்பரத்தில் அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடி செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார்.

     தில்லியில் வலம் வரும் ஆட்டோக்களில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அக்கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளரான அரவிந்த் கேஜரிவால் மற்றும் பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடி ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில், அரவிந்த் கேஜரிவாலின் படத்துக்கு கீழே "நேர்மையானவர்' என்றும், கிரண் பேடியின் படத்துக்கு கீழே "சந்தர்ப்பவாதி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரண் பேடி தற்போது அரவிந்த் கேஜரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இதை உறுதிப்படுத்திய பாஜகவின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பிரவீன் சங்கர் கபூர் கூறுகையில், "சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் அப்புறப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு அந்த நோட்டீஸ் மூலம் கேஜரிவால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்' என்றார்.

    தேர்தல் ஆணையத்தில் புகார்: இந்நிலையில், ஆம் ஆத்மி சுவரொட்டிகளில் கிரண் பேடியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்தில் பாஜக செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளது.

    ஏற்கெனவே, பாஜக மூத்த தலைவர் ஜெக்தீஷ் முகியின் புகைப்படமும் ஆம் ஆத்மி கட்சியின் விளம்பர சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரும் அரவிந்த் கேஜரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai