Enable Javscript for better performance
ஆள்மாறாட்ட வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆள்மாறாட்ட வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுவிப்பு

    By புது தில்லி  |   Published on : 15th April 2016 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தில்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி அனூஜ் அகர்வால் வியாழக்கிழமை தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

    குற்றம் சாட்டப்பட்ட மாணவரும், அவருக்குப் பதிலாக தேர்வு எழுதியதாகக் கூறப்படும் ராகேஷ் என்ற மாணவரும் தேர்வில் மோசடி செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதை விசாரணைக் குழுவினரால் நிரூபிக்க முடியவில்லை. அந்த மாணவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத வரை, அவர் குற்றமற்றவராகவே கருதப்படுவார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    தில்லி பல்கலைக்கழகம் சார்பில், கர்கி கல்லூரியில் கடந்த 2006-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வில், குற்றம் சாட்டப்பட்ட அந்த மாணவருக்குப் பதிலாக, ராகேஷ் என்ற மாணவர் தேர்வு எழுதியதாகக் கூறப்படுகிறது.

    தேர்வு நடந்தபோது, ராகேஷ் வைத்திருந்த அடையாள அட்டையில் அவரது புகைப்படமும், வருகைப் பதிவேட்டில் அவருடைய கையெழுத்தும் பொருந்தவில்லை. அதனால், சந்தேகம் அடைந்த தேர்வறை கண்காணிப்பாளர், கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதையடுத்து, கல்லூரி முதல்வர் அளித்த புகாரின்பேரில், குற்றம் சாட்டப்பட்ட அந்த மாணவர் மீதும், ராகேஷ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    எனினும், அந்த மாணவர் மீதான புகாரை விசாரணை அதிகாரிகளால் நிரூபிக்க முடியவில்லை. விசாரணையின்போது, தன் மீதான புகார்களுக்கு மறுப்பு தெரிவித்த அந்த மாணவர், தேர்வு நுழைவுச் சீட்டு கூட தனக்கு கிடைக்கவில்லை என்றும், ராகேஷை தனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai