Enable Javscript for better performance
\\\"தில்லியில் 41 டிகிரி வெயில்: அனல் காற்று, இரவில் புழுக்கம் அதிகரிக்கும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "தில்லியில் 41 டிகிரி வெயில்: அனல் காற்று, இரவில் புழுக்கம் அதிகரிக்கும்'

    By புது தில்லி  |   Published on : 15th April 2016 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி அதிகரித்து, 41 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இதனால் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் தில்லிவாசிகள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர்.

    இதனிடையே, தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் அடுத்த வாரம் அனல் காற்று வீசும் என்றும் இரவு நேரங்களில் அதிக அளவு புழுக்கம் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக, தில்லியில் உள்ள இந்திய வானிலை மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை, இரவு நேரங்கள் இயல்பை விட அதிக அளவு புழுக்கம் இருக்கும். ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய வடமேற்கு மாநிலங்களில் வரும் 21-ஆம் தேதி வரை இயல்பான வெப்பநிலையே காணப்படும்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராத்வாடா, விதர்பா ஆகிய பகுதிகள், ராயலசீமாவில் உள்ள சில பகுதிகள், தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு, மேற்குப் பகுதிகள் தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதி, பஞ்சாப், ஹரியாணா, ஒடிஸா, மேற்கு வங்கத்தில் கங்கைச் சமவெளி ஆகிய பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசுவதாக, "ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஒடிஸாவில் உள்ள தித்லகரில் வெப்பநிலை அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸும், ஆந்திரப் பிரதேசத்தின் நல்கொண்டாவில் 44 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. ஹைதராபாதில், கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    இந்தியாவின் கிழக்கு, மத்தியப் பகுதிகளைக் காட்டிலும், வடமேற்குப் பகுதியில் ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைவாக இருப்பதாக அந்த வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தில்லியில் 41 டிகிரி வெயில்: இதனிடையே, தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி அதிகரித்து, 41 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகரித்து 24 டிகிரி செல்சியஸாகப் பதிவானது என்று தில்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai