Enable Javscript for better performance
தில்லி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    தில்லி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

    By புது தில்லி  |   Published on : 15th April 2016 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிழக்கு தில்லியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தல், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் உயிர் தப்பினர்.

    இதுதொடர்பாக, தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    பட்பர்கஞ்சப் பகுதியில் உள்ள பாத்ரா அடுக்குமாடிக் குடியிருப்பில், மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் மதியம் 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதையடுத்து, 14 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புப் படையினர் அங்கு வந்தனர். அந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள், அங்கிருந்து பத்திரமாக வெளியேறிக் கொண்டனர். அதையடுத்து, தீயணைப்புப் படையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டனர்.

    அங்குள்ள வீடுகளில் பூஜைக்காக ஏற்றி வைத்த விளக்கால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai