Enable Javscript for better performance
நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு புதுக்கட்சி: யோகேந்திர யாதவ்- Dinamani

சுடச்சுட

    

    நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு புதுக்கட்சி: யோகேந்திர யாதவ்

    By புது தில்லி  |   Published on : 15th April 2016 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும் என்று ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவர்களின் ஒருவரான யோகேந்திர யாதவ் கூறினார்.

    ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறிய யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகிய இருவரும், "ஸ்வராஜ் அபியான்' என்ற தன்னார்வ அமைப்பை கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கினர். இந்நிலையில், அவர்கள் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் தில்லியில் செய்தியாளர்களிடம் யோகேந்திர யாதவ் வியாழக்கிழமை கூறியதாவது:

    நாங்கள் தன்னார்வ அமைப்பாக மட்டுமின்றி, மாற்று அரசியல் இயக்கத்தை நிறுவ வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக, குறைந்தது 6 மாநிலங்களில் உள்ள 100 மாவட்டங்களில் எங்களது கிளைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

    முதலில், அடுத்த 2-3 மாதங்களில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களை மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பார்கள். அதன் பிறகு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தேசிய அளவிலான குழுவை நியமிப்பார்கள். அந்தக் குழுவானது, புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்றார் யோகேந்திர யாதவ்.

    "பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில்  ஸ்வராஜ் அபியான் அமைப்பு போட்டியிடுமா?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "அதுதொடர்பாக, எங்கள் தேசியக் குழு முடிவு செய்யும்' என்று யோகேந்திர யாதவ் பதிலளித்தார். மேலும், தில்லியில் 13 மாநகராட்சி வார்டுகளுக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், சுயேச்சை உறுப்பினர் ஒருவருக்கு ஆதரவு தர இருப்பதாகவும் யோகேந்திர யாதவ் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai