Enable Javscript for better performance
பெயர் மாற்றம் கோரிய திருநங்கையின் மனு:மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பெயர் மாற்றம் கோரிய திருநங்கையின் மனு:மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

    By புது தில்லி  |   Published on : 15th April 2016 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநங்கை ஒருவர் தனது பெயர், பாலினம் ஆகியவற்றை அரசு ஆவணங்களில் மாற்றம் செய்யக் கோரி தொடுத்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தில்லியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மத்திய சமுகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகமும், அரசு இதழ் வெளியீட்டுத் துறையும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி மன்மோகன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

    முன்னதாக, பிறப்பில் ஆணாக இருந்து, நடை, உடை, பாவனைகளால் பெண்ணாக மாறியதால் பல்வேறு பாகுபாடுகளை சந்திப்பதாக அந்தத் திருநங்கை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அதைத் தொடர்ந்து அந்தத் திருநங்கை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், ""பாலுறுப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல், அரசு ஆவணங்களில் அந்தத் திருநங்கையின் பெயர், பாலினம் ஆகியவற்றை மாற்றுவதற்கு அரசிதழ் வெளியீடு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்'' என்று முறையிட்டார். அதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹர்ஷ் அஹுஜா, ""மனுதாரரின் கோரிக்கைகளுக்கு "2015-ஆம் ஆண்டின் திருநங்கைகள் உரிமைகள் மசோதா'வில் இருக்கலாம்; ஆனால், அந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது'' என்றார்.  அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai