Enable Javscript for better performance
காங்கோ நாட்டு இளைஞர் அடித்துக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் காங்கோ நாட்டு இளைஞர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீஸார் கூறினர்.

    இதுகுறித்து அவர்கள் சனிக்கிழமை கூறியதாவது:

    காங்கோ நாட்டைச் சேர்ந்த ஒலிவியா (23) என்ற அந்த இளைஞர் தில்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் வெளிநாட்டு மொழிகள் கற்றுக்கொடுப்பவராக பணிபுரிந்து வந்தார்.

    தெற்கு விரிவாக்கப் பகுதியில் தங்கியிருக்கும் அவர், வசந்த் குஞ்சில் உள்ள கிஷான்கத் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளார். இந்நிலையில், இரவு 11.45 மணியளவில் அப்பகுதியில் இருந்த 3 பேர் கொண்ட கும்பலுக்கும், ஒலிவியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அந்தக் கும்பல் தாக்கத் தொடங்கியதை அடுத்து ஒலிவியா அங்கிருந்து தப்பிக்க முயன்றார். எனினும், அவரை சுமார் 20-25 மீட்டர் துரத்திய அந்தக் கும்பல் ஒலிவியாவை கல்லால் தாக்கியது.

    இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஒலிவியாவை மீட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒலிவியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

    இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். கொலையாளிகளைக் கண்டறிய சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி விடியோ பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.

    இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததற்கான காரணம் தெரியவராததால், இனவெறித் தாக்குதல், கொள்ளை என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai