Enable Javscript for better performance
டிடிஇஏ பள்ளிகளில் சமூக நல்லிணக்க வாரம் கடைப்பிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    டிடிஇஏ பள்ளிகளில் சமூக நல்லிணக்க வாரம் கடைப்பிடிப்பு

    By DIN  |   Published on : 28th November 2016 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் சமூக நல்லிணக்க வாரம் கடந்த 19 முதல் 25-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது.
    இதையொட்டி, தில்லியில் உள்ள டிடிஇஏ பள்ளிகளில் தேசிய ஒற்றுமை தினம், தாழ்த்தப்பட்டவர்கள் நல்வாழ்வு தினம், மொழி ஒற்றுமை தினம், கலை வளர்ச்சி தினம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம், அரசியல் சாசன தினம், மூவர்ணக் கொடி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அந்தந்த மாணவர்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் டிடிஇஏ பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    அந்தந்தப் பள்ளிகளில் மாணவர்கள் உரை நிகழ்த்தினர். மேலும், மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது குறித்து டிடிஇஏ செயலர் ஆர்.ராஜு கூறுகையில், "இதுபோன்ற நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்களிடையே, சமூகம் குறித்த புரிதலையும், நல்லுணர்வையும் ஏற்படுத்தும்' என்றார்.
    அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பள்ளி முதல்வர்கள் ராஜி கமலாசணன், சித்ரா வாசகம், ஹரி கிருஷ்ணன், துணை முதல்வர்கள் உமா ரவி, காயத்ரி, மீனா சகானி, ஈஸ்வரி ஆகியோர் இத்தினங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai