Enable Javscript for better performance
கணினிசார் குற்ற விசாரணை: காவல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கணினிசார் குற்ற விசாரணை: காவல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி

    By DIN  |   Published on : 08th October 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகளுக்கு எதிரான கணினி சார்ந்த குற்றங்களை விசாரிப்பது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.
    இம்முகாமை தில்லி காவல் துறையின் குழந்தைகள் மற்றும் மகளிருக்கான சிறப்பு காவல் பிரிவு, இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சில், அமெரிக்காவைச் சேர்ந்த காணாமல் போகும் மற்றும் சுரண்டப்படும் குழந்தைகளுக்கான சர்வதேச மையம் இணைந்து நடத்தியது.
    தில்லி சாணக்கியபுரியில் உள்ள நவீன காவல் பணி பயிற்சி அகாதெமியில் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை இம்முகாம் நடைபெற்றது.
    இம்முகாமை சிறப்பு காவல் ஆணையர் எஸ். சுந்தரி நந்தா தொடக்கி வைத்தார். நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் நுதன் குஹா பிஸ்வாஸ் பங்கேற்று, பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
    இணையதளத்தில் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துதல், சுரண்டப்படுதல், இணையதள ஆதாரங்களைப் பாதுகாத்தல், எண்ம ஆதாரங்களை கையாளுவதில் உள்ள சிக்கல்கள், பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
    "சைல்டு லைன் இந்தியா' அமைப்பின் சார்பிலும் பயற்சி அளிக்கப்பட்டது. தில்லி காவல்துறையின் துணை ஆணையர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்பட 57 மூத்த அதிகாரிகள் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai