Enable Javscript for better performance
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
    இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து நிறுவனம் நடத்தி வரும் நபரை ஜெய் பகவான் (29) என்பவர் தனது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து சம்பவத்தன்று கடத்தினார். பின்னர் அவரை விடுவிக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
    இந்நிலையில், கடத்தப்பட்டவரை கழுத்தை நெரித்து தான்சா எல்லைப் பகுதியில் போட்டுவிட்டு ஜெய் பகவானும், அவரது கூட்டாளிகளும் தப்பிவிட்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக தொழிலதிபர் உயிர் பிழைத்துக் கொண்டார். இதையடுத்து, அவர் அளித்த புகாரின்பேரில் ஜெய் பகவான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் மேற்கு தில்லி ஜரோடா காலன் பகுதியில் ஜெய் பகவானை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai