Enable Javscript for better performance
பள்ளிகளில் 26,031 ஆசிரியர் காலி பணியிடங்கள்: தில்லி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகளில் 26,031 ஆசிரியர் காலி பணியிடங்கள்: தில்லி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

    By DIN  |   Published on : 08th October 2016 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியிலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி, தில்லி அரசு மற்றும் மாநகராட்சிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக "சோஷியல் ஜூரிஸ்ட்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
    தில்லியில் மூன்று மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டில் 1197 பள்ளிகளும், தில்லி அரசின் கட்டுப்பாட்டில் 1,011 பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் மொத்தமாக சுமார் 26 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
    இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் தொடுத்த வழக்கில், "அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் பணியிடம் கூட காலியாக இருக்கக் கூடாது; ஆண்டுதோறும் ஆசிரியர் காலி பணியிடங்களை கணக்கிட்டு, அதற்கேற்றபடி புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்' என்று தில்லி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    ஆனால், இந்த உத்தரவை தில்லி அரசும், மாநகராட்சிகளும் வேண்டுமென்றே அவமதித்து வருகின்றன.
    தில்லி அரசு கடந்த ஆண்டு புதிதாக உருவாக்கிய 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தவிர்த்து, அரசு பள்ளிகளில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஆசிரியர் - மாணவர் விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த மனு மீதான விசாரணை வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai