Enable Javscript for better performance
போலி காப்புரிமை இணையதளம்: மத்திய வர்த்தகத் துறை எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    போலி காப்புரிமை இணையதளம்: மத்திய வர்த்தகத் துறை எச்சரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலக்கியம், நாடகம், இசை உள்ளிட்ட பிரிவுகளுக்கான காப்புரிமை பதிவு செய்யப்படும்' என போலியாக இயங்கி வரும் இணையதளத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று மத்திய வர்த்தகத் துறை எச்சரித்துள்ளது.
    இது தொடர்பாக அத்துறை உயரதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தொழில் கொள்கை, மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்குவதாகக் கூறி  இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளம் மூலம் இலக்கியம், கலை, நாடகம், இசை, ஒலிப்பதிவு, திரைப்படங்கள் உள்ளிட்டவற்றுக்கான காப்புரிமை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.
    காப்புரிமை பதிவு அல்லது வேறு செயல்பாடுகளுக்கு இந்த இணையதளத்தை மத்திய வர்த்தகத் துறை பயன்படுத்தவில்லை. அந்த இணையதளத்தை முடக்க சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    காப்புரிமை விவகாரங்களுக்காக  இணையதளத்தை மட்டுமே மத்திய அரசு பயன்படுத்துகிறது. அனைத்து வித அலுவல் தொடர்புகளுக்கும், தகவல்களுக்கும் இந்த இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai