Enable Javscript for better performance
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி- Dinamani

சுடச்சுட

    

    தில்லி புறநகரிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் பந்தல் போடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    தில்லி புறநகர் பகுதியான அலிப்பூரில் ஒரு பண்ணை வீட்டில் வியாழக்கிழமை பந்தல் போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். டேனிஷ் (24) என்ற தொழிலாளி, பெரிய இரும்பு ஏணியில் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இதர தொழிலாளர்கள் அந்த ஏணியை பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, உயர் அழுத்த மின்கம்பியில் ஏணி உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் டேனிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார் அந்த அதிகாரி.
    6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
    புது தில்லி, அக். 7: வடமேற்கு தில்லியிலுள்ள மின்விளக்கு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    வடமேற்கு தில்லியின் ராணி பாக் பகுதியில் மின்விளக்கு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பதாக ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
    இதையடுத்து, அந்த தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்களும், போலீஸாரும் இணைந்து, அந்த தொழிற்சாலையில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது, 10 முதல் 14 வயதுடைய 6 குழந்தை தொழிலாளர்கள் அங்கு பணியாற்றி வருவது கண்டறியப்பட்டது.
    அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். அந்த சிறுவர்களை பணியமர்த்தியதாக யேகேந்தர் பாஸ்வான் என்ற ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட சிறுவர்கள், கேசவ்நகரிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என்றார் அந்த அதிகாரி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai