Enable Javscript for better performance
வாகனத் திருட்டு: மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 மோட்டார்சைக்கிள்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தில்லி காவல் துறையின் புறநகர் மாவட்டத் துணை ஆணையர் எம்.என். திவாரி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    சுல்தான்புரி காவல் நிலைய சரகப் பகுதியில் வியாழக்கிழமை மங்கோல்புரியைச் சேர்ந்த ராகுல், அவரது நண்பரான உத்தம் நகரைச் சேர்ந்த ஷியாம் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
    அப்போது, அவர்களை இருவர் வழிமறித்து கத்தியால் தாக்கிவிட்டு மோட்டார்சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். ராகுல் அளித்த புகாரைத் தொடர்ந்து, சுல்தான்புரி காவல் நிலைய போலீஸார் வாகனத் திருடர்கள் குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    இந்நிலையில், ஏபி எக்ஸ்டென்ஷன் ரோடு பகுதியில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மோட்டார்சைக்கிளை விற்பதற்கு செல்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
    இதையடுத்து, சுல்தான்புரி போலீஸார் அங்கு விரைந்து சென்று மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும் மங்கோல்புரி ரோஹித் (எ) ராகுல் (20), சுல்தான்புரி குனால் (21), கிராரியைச் சேர்ந்த ஜிதேந்தர் (32) ஆகியோர் என்று தெரிய வந்தது.
    அவர்கள் பல்வேறு இடங்களில் வாகனத் திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 11 மோட்டார்சைக்கிள்கள் மீட்கப்பட்டது என்று எம்.என். திவாரி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai