Enable Javscript for better performance
4 மாநில உயரதிகாரிகள் ஆஜராக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு: சிஎன்ஜி நிலையங்கள் அமைக்கும் விவகாரம்- Dinamani

சுடச்சுட

    

    4 மாநில உயரதிகாரிகள் ஆஜராக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு: சிஎன்ஜி நிலையங்கள் அமைக்கும் விவகாரம்

    By DIN  |   Published on : 08th October 2016 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய தலைநகர் வலயப் பகுதியில் (என்சிஆர்) சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்காத ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், 4 மாநில அதிகாரிகளும் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
    தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது தொடர்பாக வர்தமான் கௌஷிக் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வரும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
    கடந்த ஜூலை 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தில்லி மற்றும் என்சிஆரில் 10 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் பதிவை ரத்து செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சிஎன்ஜி நிரப்பும் நிலையங்கள் இல்லாத சில என்சிஆர் பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை இயக்குவதற்கு அனுமதிக்க கோரி
    அப்பகுதிவாசிகள் தரப்பில் முறையிடப்பட்டது.
    இதை நிராகரித்த பசுமைத் தீர்ப்பாயம் ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் என்சிஆரில் சிஎன்ஜி நிலையங்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கும்படி அறிவுறுத்தியது.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பாயத் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அப்போது, ஹரியாணா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து, தீர்ப்பாய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
    உங்களது பகுதிகளில் சிஎன்ஜி நிலையங்கள் அமைப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தில்லியில் 50 சதவீத காற்று மாசுபாட்டுக்கு, அண்டை மாநிலங்களே காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தில்லியில் காற்றின் தரம் மோசமாக மாறி வருகிறது. அப்படியிருக்கையில், என்சிஆரில் சிஎன்ஜி நிலையங்கள் அமைக்க 4 மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், என்சிஆரில் உங்ளது போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதித்து விடுவோம்.
    இந்த விவகாரம் தொடர்பாக, 4 மாநில அதிகாரிகளும், மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் அதிகாரிகளும் வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட தீர்ப்பாயம், அன்றைய தேதிக்கு அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai