Enable Javscript for better performance
அங்கோலா மாணவியிடம் பர்ஸ் வழிப்பறி- Dinamani

சுடச்சுட

    

    கிரேட்டர் நொய்டாவில் அங்கோலா குடியரசைச் சேர்ந்த மாணவியிடம் பர்ஸை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    இது குறித்து காவல் துறை உயரதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: அங்கோலா குடியரசை சேர்ந்தவர் மனெளலா ஜியோர்ஜனட். இவர் நொய்டா சர்வதேச பல்கலைக்கழகத்தில் பிடெக் படித்து வருகிறார். இந்நிலையில், இவர் வியாழக்கிழமை நொய்டா செக்டார் 36-இல் உள்ள தனது குடியிருப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
    அப்போது ஆல்ஃபா கமர்சியல் காம்ப்ளக்ஸ் அருகே மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் இவரது பர்ஸை பறித்தனர். இதை நேரில் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் அப்பெண்ணுக்கு உதவச் சென்றார். அதற்குள் வழிப்பறித் திருடர்கள் இருவரும் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் பேரில் காஸ்னா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருடர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai