Enable Javscript for better performance
ஆம்புலன்ஸில் நோயாளி சாவு: உ.பி. அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்புலன்ஸில் நோயாளி சாவு: உ.பி. அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 15th October 2016 11:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி, ஆக்ஸிஜன் உருளையில் பிராணவாயு இல்லாத காரணத்தால் உயிரிழந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு, அந்த மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    பிஜ்னோரின் சந்த்பூர் பகுதியில் முகமது அஸ்லாம் என்பவர் ஆஸ்துமாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு கடந்த 10-ஆம் தேதி, ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு சுவாசக் காற்று செலுத்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் உருளையில் பிராணவாயு இல்லாமல் வெறுமையாக இருந்துள்ளது. இதனால் அவர் உயிரிழந்துவிட்டார்.
    இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில குடும்ப நலன் மற்றும் பொது சுகாதாரத் துறை செயலருக்கு 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai