Enable Javscript for better performance
ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையங்களில் இலவச "வைஃபை': மங்கு சிங் தொடக்கிவைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையங்களில் இலவச "வைஃபை': மங்கு சிங் தொடக்கிவைத்தார்

    By DIN  |   Published on : 15th October 2016 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவசமாக வைஃபை வசதி அளிக்கும் சேவையை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) மேலாண்மை இயக்குநர் மங்கு சிங் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
    புது தில்லி ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் துவாரகா செக்டார்-21 வரை சுமார் 22.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏர்போர்ட் விரைவு ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதியை அளிக்கும் நடவடிக்கையை டிஎம்ஆர்சி தொடங்கியுள்ளது.
    தில்லி சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான விழாவில் இலவச வைஃபை சேவையை டிஎம்ஆர்சி மேலாண்மை இயக்குநர் மங்கு சிங் தொடங்கிவைத்தார்.
    இந்த வசதி குறித்து டிஎம்ஆர்சி உயரதிகாரி கூறியதாவது: "ஓயூஐ டிஎம்ஆர்சி ஃப்ரீ வைஃபை' எனும் தலைப்பில் இந்த வைஃபை இணையதள சேவை ஏர்போர்ட் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும்.
    இதுபோன்ற வசதியை மெட்ரோ ஒருங்கிணைப்பில் அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக வழங்குவதை டிஆர்எம்சி இலக்காகக் கொண்டுள்ளது.
    இந்த வைஃபை வசதியை அளிப்பதற்காக "டெக்னோ சாட் காம்' நிறுவனத்துடன் டிஎம்ஆர்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் இதுபோன்ற வைஃபை வசதி முதல் முறையாக தில்லி - ஹெளரா இடையே இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தொடங்கப்பட்டது.
    இதன் மூலம் பயணிகள் ரயில் நிலையத்தின் உள்பகுதியில் மின்னஞ்சல், முகநூல், கூகுள், விடியோ மூலம் உரையாடல், கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளின் நேரலையைப் பார்ப்பது போன்ற வசதிகளைப் பெறலாம்.
    தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் ராஜீவ் சௌக், கஷ்மீரி கேட், சென்ட்ரல் செக்ரடேரியேட், ஹோஸ் காஸ் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் "ரயில் டெல் கார்ப்பரேஷன்' நிறுவனத்துடன் டிஎம்ஆர்சி இணைந்து வைஃபை வசதியை அளித்து வருகிறது. ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடடத்தில் நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai