Enable Javscript for better performance
குழந்தை கடத்தல் புகார்: ஹோட்டல் மீது கும்பல் கல்வீச்சு- Dinamani

சுடச்சுட

    

    குழந்தை கடத்தல் புகார்: ஹோட்டல் மீது கும்பல் கல்வீச்சு

    By DIN  |   Published on : 15th October 2016 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக புகார் கூறி காஜியாபாதில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கும்பல் கல்வீசித் தாக்கியது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இதுகுறித்து காஜியாபாத் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் சல்மான் தாஜ் பாட்டீல் கூறியதாவது:
    சம்பவத்தன்று, ஒரு மைனர் சிறுமியுடன் 24 வயது இளைஞர் ரயில்வே சாலை பசாரியா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினார். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சம்பந்தப்பட்ட ஹோட்டலின் உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களை சரிபார்க்காமல் முன்பின் தெரியாத நபர்களுக்கு ஹோட்டலில் அறைகளை வாடகைக்கு விடுவதாக புகார் தெரிவித்தனர். மேலும், குழந்தைகள் கடத்தலுக்கு ஹோட்டலை சேர்ந்தவர்கள் துணை போவதாகக் குற்றம்சாட்டி ஹோட்டல் மீது கற்களை  வீசித் தாக்கினர்.
    இது தொடர்பாக அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஹோட்டலின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சல்மான் தாஜ் பாட்டீல் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai