Enable Javscript for better performance
கேசவபுரம் ஸ்ரீ ஐஸ்வர்ய கணபதி கோயிலில் பூர்ண புஷ்கலா கல்யாண மஹோத்ஸவம்:நவம்பர் 11-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கேசவபுரம் ஸ்ரீ ஐஸ்வர்ய கணபதி கோயிலில் பூர்ண புஷ்கலா கல்யாண மஹோத்ஸவம்:நவம்பர் 11-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 15th October 2016 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி கேசவபுரத்தில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோயிலில் பூர்ண புஷ்கலா கல்யாண மஹோத்ஸவம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    இதையொட்டி, நவம்பர் 11-ஆம் தேதி காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், அதைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை, கன்யா பூஜை நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு கனகா சுதாகர் மாணவர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.
     நவம்பர் 12-ம் தேதி மாலை 3 மணிக்கு பிரச்சீன சம்பிரதாய பஜனை, மாலை 6.30 மணிக்கு ஜானவாசம், நிச்சயதார்த்தம், தேவதா தியானம் ஆகியவை நடைபெறும். நவம்பர் 13-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஸ்ரீ கல்யாண வரதருக்கு அபிஷேகம், அர்ச்சனையும், காலை 8 மணிக்கு உஞ்சவிருத்தி, பூர்ண புஷ்கலா திருக்கல்யாணம், ஆஞ்சநேய உத்ஸவம்நடைபெறும்.
    இதற்கான ஏற்பாடுகளை ஆஸ்திக சமாஜ நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai