Enable Javscript for better performance
சிறுமி பாலியல் பலாத்காரம்: பக்கத்துவீட்டு இளைஞர் மீது புகார்- Dinamani

சுடச்சுட

    

    சிறுமி பாலியல் பலாத்காரம்: பக்கத்துவீட்டு இளைஞர் மீது புகார்

    By DIN  |   Published on : 15th October 2016 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு தில்லியில் உள்ள கயலா பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பக்கத்து வீட்டு இளைஞர் மீது போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து காவல் துறை உயரதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: அச்சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். பக்கத்து வீட்டில் வசித்து வரும் 32 வயது இளைஞரும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளன.
    இந்நிலையில், கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயத்தில் அந்த இளைஞர் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பெற்றோர் வீடு திரும்பியதும் நடந்த சம்பவம் குறித்து சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே அக்டோபர் 3-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.  பின்னர் அந்த இளைஞர் தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai